சென்னை: அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதைத் தொடர்ந்து தமிழக தேர்தல் (TN Elections) களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. வழக்கமான கட்சிகளுடன் இம்முறை பல புதிய கட்சிகளும் பல புதிய நபர்களும் தேர்தல் களத்தில் அதிகமாகக் காணப்படுகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM), தமிழகத்தின் மீது தன் பார்வையைத் திருப்பியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் (TN Assembly elections 2021) இக்கட்சி போட்டியிடவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கு குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது என்று ஓவைசிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் AIMIM கைகோர்க்கக்கூடும் என்றும் பேசப்படுகின்றது.


“ஒவைசி இன்று (திங்கட்கிழமை) சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த தனது கட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடி வருகிறார். கலந்துரையாடல்கள் ஹைதராபாத்தில் (Hyderabad) நடந்து கொண்டிருக்கின்றன” என்று கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறின. தேர்தல் திட்டத்தை இறுதி செய்வதற்காக கட்சி ஜனவரி மாதம் திருச்சி மற்றும் சென்னையில் மாநாடுகளை நடத்த வாய்ப்புள்ளது.


ALSO READ: சட்டப்பேரவை தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன், தொகுதி பின்னர் அறிவிக்கப்படும்: கமல்


இதற்கிடையில், கமல்ஹாசன் (Kamal Haasan) திங்களன்று "நிச்சயமாக வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவேன்" என்று அறிவித்தார். "நான் போட்டியிடும் தொகுதி பற்றி பின்னர் அறிவிப்பேன்" என்று எம்.என்.எம் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


அசாதுதீன் ஒவைசியும் (Asaduddin Owaisi) கமல்ஹாசனும் இதற்கு முன்னரும் பல விவகாரங்களில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்ததைக் கண்டுள்ளோம். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே உண்மையில் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு கமல்ஹாசன் வெளியிட்ட கருத்தை AIMIM தலைவர் ஆதரித்தார்.


பீகார் (Bihar) சட்டமன்றத் தேர்தலில் AIMIM கட்சி சிறப்பாக செயல்பட்டு, முஸ்லீம் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து முக்கியமான தொகுதிகளான பைஸி, அமூர், கோச்சாதமன், பகதூர்கஞ்ச் மற்றும் ஜோகிஹாட் ஆகியவற்றை வென்றது. இதைத் தொடர்ந்து இக்கட்சியின் உறுதி அதிகரித்துள்ளது. பீகாரின் AIMIM கட்சி 20 இடங்களில் போட்டியிட்டது.


ஹைதராபாத் குடிமைத் தேர்தலிலும் AIMIM 44 இடங்களைப் பெற்று, இரண்டாவது இடத்திற்கு பாஜகவுக்கு கடுமையான போட்டியை அளித்தது. தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு சாத்தியக்கூறு உள்ளது என AIMIM கட்சிக்குத் தோன்றுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை


2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.86 சதவீதமாக உள்ளது.


மாநிலத்தில் ஏற்கனவே பல சிறு முஸ்லீம் கட்சிகள் இருந்தாலும், கடந்த தேர்தல்களில் அவை இரண்டு திராவிட கூட்டணிகளுக்கு இடையே பிளவுபட்டு இருந்துள்ளன.


“ஒவைசி அனைத்து முஸ்லீம் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். AIMIM, மக்கள நீதி மய்யம் (கமலின் கட்சி), நாம் தமிழர் மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடும்” என்று கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.


ALSO READ: Kamal vs Rajini: மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன்!


தமிழ்நாட்டில் (Tamil Nadu) இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இந்தியன் நேஷனல் லீக், மனிதனேய மக்கள் கட்சி, மனிதானேய ஜனநாயக கட்சி, அகில இந்திய முஸ்லீம் லீக், தமிழ்நாடு தோவ்ஹீத் ஜமாத் மற்றும் பிற சிறிய கட்சிகள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக உள்ளன.


வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.


தொகுதிகளை அடையாளம் காண, தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் கட்சி ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருவதாக AIMIM இன் தமிழ்நாடு பிரிவின் தலைவர் வக்கீல் அகமது கடந்த மாதம் ஒரு செய்தி வலைத்தளத்திடம் தெரிவித்திருந்தார்.


திராவிட முனேற்றக் கழகத்தின் (DMK) பொதுச் செயலாளர் துரைமுருகனுடன் கூட்டணி பற்றி பேசியதாகவும், அவரிடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை என்றும் அகமது கூறியிருந்தார். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) பாஜக-வுடன் கூட்டணியில் இருப்பதால், அக்கட்சியுடனான கூட்டணிக்கு சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR