வேளான் மசோதா: திருச்சி மற்றும் தாம்பரத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம்!!
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாய மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. உத்திர பிரதேசத்தில் விவசாய சங்கங்கள் சேர்ந்து மூன்று நாள் போராட்டங்களை அறிவித்துள்ளன.
நாடாளுமன்றம் நிறைவேற்றிய மூன்று வேளான் மசோதாக்களுக்கு (Farm Bill) எதிராக சில உழவர் அமைப்புகளின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாட்டின் திருச்சி மற்றும் தம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில், பாதி உடையணிந்த விவசாயிகள் திருச்சியில் (Trichy) உள்ள கலெக்டரேட்டுக்கு வெளியே மனித மண்டை ஓடுகளை தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போராட்டத்தை நடத்தினர். மசோதாக்களை சட்டமாக்கக் கூடாது என்று அவர்கள் கோரினர்.
இந்த மசோதாக்கள் புதன்கிழமை முடிவடைந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் (Parliament) நிறைவேற்றப்பட்டன.
தாம்பரத்தில், விவசாயிகள் மற்றும் இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களும் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையில், மசோதாக்கள் தமிழ்நாட்டில் (Tamil Nadu) விவசாயிகளை பாதிக்காது என்று விவசாய அமைச்சர் ஆர்.தொரைக்கண்ணு தெரிவித்தார்.
ALSO READ: UP on High Alert: வேளான் மசோதாக்களால் வலுக்கும் போராட்டங்கள், தொடரும் பதட்டம்!!
இந்த மசோதாக்கள் மாநில விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று கூறி முதல்வர் கே பழனிசாமியும் ஆதரவு அளித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாய மசோதாக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. உத்திர பிரதேசத்தில் விவசாய சங்கங்கள் சேர்ந்து மூன்று நாள் போராட்டங்களை அறிவித்துள்ளன. ஹரியானா (Haryana) மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
விவசாய வர்த்தகத்தை தாராளமயமாக்கும் என்று அரசாங்கம் கூறும் மசோதாக்களை எதிர்த்து சனிக்கிழமை வரை பஞ்சாபில் மூன்று நாள் ரயில் முற்றுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மூலம் தங்கள் நலன்களை விட பெருநிறுவன நலன்கள்தான் ஊக்குவிக்கப்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ALSO READ: இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ள பஞ்சாப், ஹரியானாவில் வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR