சிறுதொழில் முனைவோருக்கு உதவும் வகையில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி வகுப்பிற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேண்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், (www.editn.in) (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு 2013-2014 ஆம் ஆண்டில் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேண்பாட்டுத் திட்டம் (NEEDS) அறிவித்தது. இத்திட்டத்தில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 3891 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.


மேலும் பிரதமரின் சுய வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் வேலையில்லா இளைஞந்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்(UYEGP) ஆகியவற்றின் வாயிலாகவும் பல்லாயிரம் தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன. குறு மற்றும் சிறுதொழில்களை விரிவுபடுத்த நினைக்கும் தொழில் முனைவோர்கள் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல், விற்பனை போன்ற தொழில்நுட்பங்களை கையாளுதல் அவசியம். 


இதனை கருத்தில் கொண்டு, தற்பொழுது தொழில் நடத்திக்கொண்டிருக்கும் தொழில் முனைவோர்களுக்காக, "மின்னணு முறையில் சந்தைப்படுத்தல்" குறித்து விழிப்புணர்வு முகாம் வரும் 27.12.2018 அன்று காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்த சாரதி கோவில் தெரு, ஈக்காடுதாங்கல், சென்னை என்ற விலாசத்தில் நடக்க உள்ளது. 


தொழில் செய்து வரும் தொழில்முனைவோர்கள், வருகை தந்து பயன் அடையுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


இப்பயிற்சி முகாமில் கலந்துக்கொள்ளுதல் தற்பொழுது செயல்பாட்டிலுள்ள அனைத்து மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் பற்றியும் அவைகளை தொழிலில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை பற்றியும் தெரிந்துக்கொள்ள உதவும் எனவும் அரசு செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இப்பயிற்சியில் 18 வயது நிரண்பிய, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்/ பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது பெயரினை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணைதளம் மூலமாகவோ பதிவு செய்துகொள்ளலாம்.


இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்...


தொழில்முனைவோர் மேண்பாட்டு நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை, பாந்த்தசாரதி கோயில் தெரு, 
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
8668102600
(www.editn.in)