ராமர் கோயில் திறப்பு விழாவை நேரலை செய்ய தடை விதிக்கவில்லை - தமிழ்நாடு அரசு
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ராமர் கோவில் பிரான்பிரதிஷ்டை விழாவை நேரலையில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கோரி தமிழக பாஜக உறுப்பினர் வினோஜ் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரடியாக ஒளிபரப்பவும், பூஜைகள், அன்னதானம் மற்றும் பஜனைகள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கோவிலில் எல்இடி காட்சிகள் நிறுத்தப்படுகின்றன. தனியார் கோவில்களும் கூட அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். சில காவல் நிலையங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் நித்தியானந்தா! அவரே வெளியிட்ட பதிவு!
அதனை பார்த்த நீதிபதி, இது பொதுவான உத்தரவு, யாரேனும் அனுமதி கேட்டால், விண்ணப்பங்களை சட்டப்படி கையாள வேண்டும் என்று நீதிபதி கண்ணா கூறினார். தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கத்தில், மனுதாரர் கூறுவதுபோல் எந்தவொரு தடையும் விதிக்கவில்லை என தெரிவித்தது. அரசியல் உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் பிறகு தமிழ்நாடு அரசின் விளக்கத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரர் கூறுவதுபோல் வாய்மொழி உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், அயோத்தியில் ராமர் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு நேரலை ஒளிபரப்பு, பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனைகள் நடத்த தடை இல்லை என்றும் டிஎன் ஏஜி தெரிவித்துள்ளதையும் சுட்டிக் காட்டினர்.
மேலும், அதிகாரிகள் எந்தவொரு வாய்மொழி அறிவுறுத்தல்களின் அடிப்படையிலும் அல்லாமல் சட்டத்தின்படி செயல்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், அதிகாரிகள் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் போது, சட்டப்படி அனுமதி கொடுப்பது அல்லது மறுப்பது தொடர்பாக காரணங்களை வழங்குவார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சிறுபான்மை சமூகத்தினர் அங்கு வசிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக அனுமதி நிராகரிக்கப்பட்டால், அத்தகைய உத்தரவை எப்படி நிறைவேற்ற முடியும்? இது ஒரு காரணமா?, இந்த காரணத்தை காரணம் காட்டி தடை விதிக்க வேண்டாம் என்று கூறினர்.
மனுதாரர் ஒரு மசூதிக்கு அருகில் நடத்த வேண்டும் என்றால் என்று தமிழக அரசு கேட்டதற்கு விளக்கம் அளித்த நீதிபதிகள், அதனை நீங்கள் ஒழுங்குபடுத்தலாம் என தெரிவித்தனர். அதேநேரத்தில் மற்ற சமூகங்களை குறிப்பிட்டு நிராகரிக்க வேண்டாம், அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் உத்தரவில் தெரிவித்தனர். பிற சமூகத்தினரை காரணம் காட்டி மாநிலம் முழுவதும் இந்த உத்தரவை அமல்படுத்தினால் பிற மதத்தினர் பிரார்த்தனை கூட்டங்களே நடத்த முடியாதே என்றும் நீதிபதிகள் கூறினர். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ