தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும், சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது... என்னென்ன கட்டுப்பாடுகள்?... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சலூன் கடைகள் உள்பட கடைகள் திறக்கப்படாமலேயே இருந்தன. 4ஆவது கட்டமாக இந்த மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கடைகளைத் திறப்பது, தொழிற்சாலைகளை இயக்க அனுமதிப்பது, உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில்  சலூன்கள், அழகு நிலையங்களை  திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சலூன்களை திறக்கலாம் . தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க அனுமதி இல்லை. குளிர்சாதன வசதியை சலூன்கள், அழகு நிலையங்களில் பயன்படுத்தக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினியை அவ்வப்போது தெளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 


இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர, மாநிலத்தின் பிற இடங்களில், நாளை முதல் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க, அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை, சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கடைகளில் குளிர்சாதன வசதியை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது என்றும், வாடிக்கையாளர்களுக்கோ பணியாளர்களுக்கோ, காய்ச்சல் அறிகுறி இருந்தால் அனுமதிக்க கூடாது, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், சமூக இடைவெளி, கிருமி நாசினி ஆகிய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், என்றும் முதலமைச்சரின் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில், சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அனுமதி இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.