சொந்த தொழில் தொடங்க 15 லட்சம் தரும் தமிழக அரசு! விண்ணப்பிப்பது எப்படி?
சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. இப்போது புதிதாக தொழில் தொடங்குபவர்கள் டான்சீட் திட்டத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு வேலை மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை தேடுபவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு உதவிகளை உதவுகிறது. இதனால் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு பயிற்சி மற்றும் கடன் உதவியும் அளித்து உதவுகிறார்கள். தற்போது தமிழக அரசின் ஒரு அங்கமான தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்கக் கழகம், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதியின் (TANCEED) கீழ் ஏழாவது சுற்றுக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு தொழில் முனைவோரை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - காவல்துறை முக்கிய எச்சரிக்கை
15 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும்
கடந்த 2021ம் ஆண்டு டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டது. அன்றில் இருந்து தற்போது வரை 169 நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பம், கிராமப்புற மக்களுக்கு உதவும் நிறுவனங்கள் மற்றும் பெண்களால் வழிநடத்தப்படும் நிறுவனங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐடியாக்களில் தொடங்கப்படும் மற்ற நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைபவர்கள் தங்கள் தொழில்களை எப்படி நடத்துவது, தொழில்முனைவோராக இருப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் நமது நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள புதிய யோசனைகள் பற்றிய முக்கியமான நிகழ்வுகளில் சேருவதற்கான வாய்ப்புகளையும், கற்றுக்கொள்வதற்கான ஒரு வருட பயிற்சியையும் பெறுவார்கள்.
புதிய வேலை வாய்ப்பு
தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், அரசின் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து 3 சதவீத பங்குகளை பெறும். புதிய யோசனைகளைக் கொண்டு வரும் நிறுவனங்கள், மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி, சமூகத்தை மேம்படுத்த உதவும் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் தங்கள் முதன்மை அலுவலகம் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். DBIIT எனப்படும் சிறப்பு அரசு இணையதளத்திலும் அவை பட்டியலிடப்பட வேண்டும். மேலும் அந்த நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருக்க கூடாது. மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட கூடாது. அரசின் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இருக்க கூடாது.
எப்படி விண்ணப்பிப்பது?
நீங்கள் புதிதாக வணிகம் செய்து இந்த சிறப்பு திட்டத்தில் சேர விரும்பினால், ஜனவரி 15க்குள் www.startuptn.in என்ற இணையதளத்திள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் குறித்து ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகம் இருந்தால் tanseed@startuptn.in க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். இதில் உங்களது கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் தொடக்கம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ