தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் சாரிபில் ‘உழவன்’ என்னும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-19-ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் போது துணை முதல்வர், நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்ததன் படி தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு உதவும் உழவன் மொபைல் செயலி இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 
இந்த செயலியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிமுப்படுத்தி வைத்தார். 


இந்த 'உழவன்' மொபைல் செயலி மூலம் வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர்காப்பீடு விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கப்படும். அதே வேலையில் டிராக்டர், பவர் டில்லர் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்றவற்றிர்கான மானியம் பெற முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேப்போல், அடுத்த 4 நாட்களுக்கான தட்பவெட்ப நிலை குறித்தும் இந்த செயலியில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Google ப்ளே ஸ்டோரில் இந்த செயலியானது தற்போது கிடைக்கின்றது.