கலைஞரின் மருத்துவ தேவைகளை வழங்க தமிழக அரசு தயார் -EPS!
திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகள் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவிக்கையில்.. 5 முறை முதலவராக இருந்தவர் என்ற முறையிலும் தற்போதும் MLA-வாக இருப்பவர் என்ற முறையிலும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மருத்துவ கண்கானிப்பிற்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவிரி மருத்துவமனையில் மருத்துவ கண்கானிப்பில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையின் இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் மருத்துவமனை சென்று கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
காலை கருணாநிதி அவர்களை சந்தித்து வந்த மத்திய அமைச்சர் கனிமொழி அவர்கள் தற்போது கருணாநிதி அவர்களின் இரத்த அழுத்தம் சீரான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கலைஞர் கருணாநிதி பூரண நலத்துடன் மீண்டு வருவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!