ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மிஸ் பண்ணாதீங்க மக்களே
Ration Card News In Tamil Nadu: ரேஷன் அட்டை விண்ணப்பம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம் என ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களை பெற ரேஷன் அட்டை சிறப்பு முகாமில் கலந்துக்கொள்ளுங்கள்.
Ration Card Special Camp Updates: தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைக்கான சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் கலந்துக்கொண்டு ரேஷன் அட்டை சம்பந்தப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் விடையை பெற்றுக்கொள்ளுங்கள். வாருங்கள் இன்று முக்கிய ஆவணமாக இருக்கும் ரேஷன் அட்டை சம்பந்தமாக இன்ஃபர்மேஷன் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
ரேஷன் அட்டை மக்கள் குறைதீர் முகாம்
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என திமுக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் ரேஷன் அட்டைக்கு விண்ணப்ப செய்தல், ரேஷன் அட்டையில் பெயர் சேர்ப்பு, ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம், ரேஷன் அட்டை முகவரி மாற்றம் என ரேஷன் கார்டு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி
இதற்காக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு முகாம், இந்த மாதம் (அக்டோபர்) 19 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த ரேஷன் அட்டை சிறப்பு சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
குடும்ப அட்டை விவரங்கள் சரிபார்ப்பு
இந்த ரேஷன் அட்டை சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு சலுகை
மேலும் நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் எனவும் கூறபப்ட்டு உள்ளது.
ரேஷன் கடை குறித்து புகார்
அதுமட்டுமில்லாமல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடு, தனியார் சந்தியாயில் விற்கப்படும் பொருட்கள், சேவையில் குறைபாடுகள் போன்ற புகார்கள் இருந்தால், சிறப்பு முகாம் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். இதன்மூலம் புகாரின் அடிப்படையில் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் விவரங்கள்
1. முன்னுரிமை அட்டைகள் (PHH) - சர்க்கரையை உள்ளடக்கிய அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
2.முன்னுரிமை - அந்தியோதய அன்னயோஜனா (PHH-AAY) - 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
3. முன்னுரிமையற்ற அட்டைகள் (NPHH) - அரிசி உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
4. சர்க்கரை விருப்ப அட்டை (NPHH-S) - அரிசியை தவிர சர்க்கரை உட்பட அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.
5. பொருளில்லா அட்டை (NPHH-NC) - எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு விதிமுறைகள் மற்றும் தகுதி என்ன?
விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் இந்தியாவில் எங்கும் குடும்ப அட்டை பெற்றிருத்தல் கூடாது.
விண்ணப்பதாரரோ மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர் பெயர் தமிழ்நாட்டில் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இடம் பெற்றிருக்க கூடாது.
விண்ணப்பதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும்.
மேலும் படிக்க - eKYC Deadline | ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! உஷார்
மேலும் படிக்க - ரேஷன் கார்டு இல்லாமல் OBC சான்றிதழ் உடனே வாங்கலாம் - எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள்
மேலும் படிக்க - Ration Card: 5 வகையான ரேஷன் கார்டுகள்! எந்த அட்டைக்கு என்ன கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ