Tamil Nadu Government | தமிழ்நாடு அரசு நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருந்தாலும், இம்மாநிலத்தில் செயல்படுத்துவதற்கான நிதியை மத்திய அரசு கொடுப்பத்தில்லை. இதனை பலமுறை தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் சுட்டிக்காட்டியிருக்கிறது. மீண்டும் ஒருமுறை தரவுகளுடன் தமிழ்நாட்டையே தலைகீழாக மாற்றப்போகும் திட்டங்களை பட்டியல் போட்டு, இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளது. ஜெய்சால்மரில் ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட ஒன்றிய அரசின் வரவு-செலவுத் திட்டத்திற்கான முன்னோட்டம் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளிவிவரங்களுடன் தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை சமர்பித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, " நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டப் பணிக்கு ஒப்புதல் அளித்ததற்காக. ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக, மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்திலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் 26,490 கோடி ரூபாய் செலவிடப்பட்ட காரணத்தால், மாநிலத்தின் நிதிநிலைமை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, இதர வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள ஏதுவாக, ஒன்றிய அரசு, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு நடப்பு ஆண்டிற்கு 10,000 கோடி ரூபாயும். அடுத்த ஆண்டிற்கு 16000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனக் தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.


2. மதுரை மற்றும் கோயம்புத்தூரி மெட்ரோ இரயில் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டுமென ஒன்றிய அரசிடம் மாண்புமிகு நிதியமைச்சர் வலியுறுத்தினார். 3. பல்வேறு திட்டங்களுக்கான நிதியை விடுவிப்பதில் ஒன்றிய அரசு கடைப்பிடித்துவரும் கடுமையான கட்டுப்பாடுகளையும், கூடுதலான நிபந்தனைகளையும் நீக்க வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக. ஒன்றிய அரசு, கோடிக்கணக்கான மக்களின் தேவைகளை நிறைவேற்றும்படியாக, மாநில அரசுகளுடன் கூட்டாக இணைந்து இத்திட்டங்களைச் செயல்படுத்த வகைசெய்திட வேண்டும். 


மேலும் படிக்க | விஜய் பாஜகவை எதிர்ப்பதற்கு காரணம் இதுதான்... ஹெச். ராஜா சொல்வது என்ன?


ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha Abhiyaan) ஆண்டுப் பணித் திட்டத்திற்கு, திட்ட ஒப்பளிப்பு வாரியம் (PAB) அனுமதித்துள்ள 2152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவிக்காமல் உள்ளது. இந்த நிதி. ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தை (RTE) நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பள்ளிகளின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும். இந்நிதியை விடுவிக்காததன் காரணமாக, மாநில அரசு முழுச் செலவையும் ஏற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளதுடன், மாநிலத்தின் நிதி நிலைமையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 


ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha Abhiyaan) கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியை ஏனைய இதர நிபந்தனைகளுடன் இணைக்காமல் உடனடியாக விடுவிக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 44 இலட்சம் மாணவர்கள். 2.2 இலட்சம் ஆசிரியர்கள் மற்றும் 21.276 பணியாளர்களின் எதிர்காலம் ஒன்றிய அரசு உரிய காலத்திற்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையே சார்ந்துள்ளது. புயல் கனமழை மற்றும் வரலாறு காணாத வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் தமிழ்நாடு தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அண்மையில், ஃபெஞ்சல் புயலால் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்புயலானது. 


14 மாவட்டங்களை பாதித்துள்ளதுடன், மக்களின் உயிர், அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. இத்தகைய கடுமையான வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கையும், அவற்றின் தீவிரமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆண்டு முழுவதற்குமான ஒட்டுமொத்த மழைப்பொழிவை சில பகுதிகள் 24 மணி நேரத்திலேயே பெறுகின்றன. திட்டமிடுவதிலும், முன்னேற்பாடு உள்ளிட்ட பணிகளிலும் மாநிலம் சீரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதிலும், இத்தகைய ஒழுங்கற்ற காலநிலை தன்மை, கணிசமான நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதுடன், மாநில நிதி நிலையையும் பாதிக்கின்றது. 


மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்தில் (SDRF) உள்ள நிதியானது, உடனடி நிவாரணம் மற்றும் நீண்டகால மறுசீரமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்குப் போதுமானதாக இல்லை. எனவே, ஃபெஞ்சல் புயலிற்குப் பின்னர், தற்காலிக மற்றும் நிரந்தர நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புத் தேவைகளை மேற்கொள்வதற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) 6,675 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டுமென ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. 


மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக தொழிற்பகுதிகளில் புதிய இரயில் தடங்கள் அமைப்பதற்கான தேவை உள்ளது. வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு,  தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு இடையே 4-வது இருப்புப்பாதை வழித்தடம், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி - ஓசூர் புதிய இருப்புப்பாதை வழித்தடம், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி (143.5 கி.மீ.) இருப்புப்பாதை வழித்தடம், மீஞ்சூர் - திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் - சிங்கப்பெருமாள்கோயில் மற்றும் மதுராந்தகம் இருப்புப்பாதை வழித்தடம். சேலம் - ஓசூர் - பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் – எர்ணாகுளம் நீட்டிப்புகளுடன் கூடிய சென்னை - சேலம் கோயம்புத்தூர் ஆகிய இடங்களை இணைக்கும் மிதவேக இருப்புப்பாதை வழித்தடம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்தகைய திட்டங்களில் ஒன்றாக, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இடையேயான உயர்மட்டச் (NH-32) மற்றும் செங்கல்பட்டிலிருந்து திண்டிவனம் வரையிலான சாலை அமைப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 2005-ஆம் ஆண்டில் சென்னை - கன்னியாகுமரி வழித்தடத் திட்டம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நான்குவழி நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்பட்டது. தற்போது போக்குவரத்து வாகனங்கள் பன்மடங்கு அதிகரித்து, சாலை விபத்துகளால் கடுமையான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட காரணமாக உள்ளது. இந்தத் திட்டத்திற்கு. வரும் நிதிநிலை அறிக்கையில் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது" என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ