`வேதா நிலையம்` வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம்...
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
சென்னை, போயஸ் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ‘வேதா நிலையம்' என்கிற வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலை சீராகவில்லை. இதையடுத்து, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி இயற்கை எய்தினார்.
இதையடுத்து தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு, ‘வேதா நிலையத்தை' நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. கடந்த சில மாதங்களாக இதற்கான பணிகளை செய்தது வந்தது அதிமுக தரப்பு.
இந்நிலையில் தற்போது, வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு. இது தொடர்பான அரசாணை இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் சொத்துகள் தங்களுக்கே சொந்தமென்று அவரின் அண்ணன் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபா சர்ச்சை கிளப்பிவந்த நிலையில் தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை வெளிப்பட்டுள்ளது.