Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசு
Tamil Nadu ration card news : புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சர்க்கரை வழங்க தமிழ்நாடுஅரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
Tamil Nadu ration card news : புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் அமைச்சர் சக்கரபாணி இனிப்பான செய்திகளை தெரிவித்துள்ளார். விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடங்கும் என கூறியிருக்கும் அவர், ரேஷன் கார்டுகளுக்கு கூடுதல் சர்க்கரை கொடுக்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய உணவக சங்கத்தின் சார்பில் நடந்த இந்திய உணவகங்களின் உச்சிமாநாடு 2024-ல் கலந்து கொண்டபோது இதனை தெரிவித்தார்.
அமைச்சர் சக்கரபாணி பேட்டி
அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசின் பொது விநியோக உணவு திட்டத்தில் துவரம் பருப்பும், பாமாயிலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையிலே வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் செப்டம்பர் மாதத்துக்கான பாமாயிலும், துவரம் பருப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
மேலும் படிக்க | CGHS புதிய விதிகள்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளித்த நிவாரணம்
உளுத்தம் பருப்பு, கோதுமை மாவு விநியோகம்
ரேஷன் கடைகளில் பாக்கெட் போட்டு அனைத்துப் பொருட்களும் வழங்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்வருடன் கலந்தாலோசித்து வருகிறோம். அதேபோல கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட உளுந்தம் பருப்பையும், கோதுமை மாவையும் நிதிநிலைக்கு ஏற்ப மீண்டும் வழங்கிடவும் பரிசீலித்து வருகிறோம். பயோமெட்ரிக்கிற்கு பதிலாக கண் கருவிழி மூலம் ஸ்கேன் செய்து பொருட்களை பெறும் முறை 28 ஆயிரம் முழுநேர கடைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைகளிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
புதிய ரேஷன் கார்டுகள் எப்போது விநியோகம்?
புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் குறித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 3 லட்சம் பேர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அதில் 1.5 லட்சம் பேருக்கு சரிபார்ப்பு பணி முடிவடைந்து அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ளவர்களுக்கு சரிபார்ப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்பணி முடிவடைந்ததும் தகுதியான நபர்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்த 40 மாதங்களில் 17.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு : அமலாக்கத்துறை சறுக்கியது எங்கே?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ