காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு, கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாட்டகாவில் பருவமழை பொழிந்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறந்துவிடப்படுகின்றன. இதனால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.


எனவே தமிழகத்தின் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு, கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய அமைச்சர் உதயகுமார் அவர்கள் இதுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டார். மேலும் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 


சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 359 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். ஆற்றங்கரையோரம் குழந்தைகள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஆற்றின் குறுக்கே செல்லும் தரைமட்ட பாலங்களை அடையாளம் காண்பதற்கு எச்சரிக்கை பதாகைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.