DMDK தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறப்பெற்றுள்ளது.
சென்னை: அதிமுக கூட்டணியில் அங்கம் வசிக்கும் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது. அந்த கூட்டணியில் அங்கம் வசித்த தேமுதிக 41 இடங்களில் வென்றது. இதனால் எதிர்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று, சட்டசபையில் எதிர்கட்சியாக தேமுதிக செயல்பட்டது. எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த், சட்டசபையில் அப்பொழுது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எதிர்த்து கேள்வி கேட்டார். இந்தநாள் ஆளும் கட்சி அதிமுக மற்றும் தேமுதிக இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அதிமுக அரசை தொடர்ந்து விஜயகாந்த் விமர்சித்து வந்தார்.
இதனையடுத்து 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் பெயருக்கு களம் கற்பிக்கும் விதமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. அதாவது 2012 முதல் 2016 வரை தமிழக அரசு சார்பில் மொத்தம் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராகி பதில் அளித்து வந்தார்.
தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவுக் காரணமாக, சிகிச்சை பெற்று ஓய்வில் உள்ளார். மேலும் நிகழ்சிகளில் கலந்துக் கொள்வதையும் தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்ககுளை திரும்பப் பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், சிறப்பு நீதிமன்றம் அவதூறு வழக்குகளை முடித்து வைத்தது