திருவாரூர் வருகை தந்த தமிழக ஆளுநர் ரவி இன்று மாலை திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதாற்காக மாலை 6 மணிக்கு வருகை தர உள்ளதாக நிகழ்ச்சி அட்டவணை வந்ததை அடுத்து திருவாரூர் தியாகராஜ சுவாமி் ஆலயத்தில் தமிழக ஆளுநருக்கு பூர்ணகும்ப மரியாதை தர அறநிலையதுறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக ஆலயத்திற்கு வருகை தரும் முக்கிய விஜபிகளுக்கும், ஆதினங்களுக்கும் ஆலயத்தின் தெற்கு கோபுவாசல அல்லது மேற்கு கோபுர வாசலில் தான் பூர்ணகும்ப மரியாதை தரப்படும். ஆனால் ஆலய நிர்வாக அதிகாரி கவிதா ஆலய மரபுக்கு முரணாக கிழக்கு கோபுர வாசலின் பெரிய கதவை ஒன்றை திறந்து வைத்து அந்த வாயிலில் தமிழக ஆளுநரை வரவேற்று பூர்ணகும்ப மரியாதை கொடுத்து ஆலயத்திற்கு அழைத்து செல்ல எற்பாடு செந்திருந்தார்.


இதனை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் இதுபோன்று மரபு மீறி செய்யகூடாது எனவும், கிழக்கு கோபுரத்தில் பூர்ணகும்பம் கொடுக்க கூடாது எனவும் ஆலய நிர்வாக அதிகாரியிடம் சொல்லியும் கேட்காமல், ஆலய சிவாச்சாரியார்கள் பூர்ணகும்பத்துடனும், மேளவாத்யங்களுடன் கிழக்கு கோபுர வாசலில் அதிகாரிகளுடன் நின்று கொண்டிருந்தனர். 


மேலும் படிக்க: தமிழகம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தெற்காசியாவுக்கே முன்மாதிரி: ஆளுநர் புகழாரம்


ஆளுநரின் கான்வாயும் கோவிலை வந்தடைந்த நிலையில், எதிர்பாரத விதமாக கோபுர கதவு அருகே மேல்பகுதியில் இருந்த மிகபெரிய தேன்கூட்டை புறா ஒன்று பறந்து வந்து மோதி்யதில் தேன்கூடு கலைத்துவிட்டது. இதனால் தேன் பூச்சிகள் ஆயிரக்கணக்கானவை வேகமாக பறந்து அங்கிருந்தவர்களையும் பக்தர்களையும் விரட்ட ஆரம்பித்தது.


அந்த தேரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அந்த இடத்திற்கு வந்தபோது காவல்துறையினர் தேன்கூடு கலைந்த விவரத்தை கூறினர். இதையடுத்து வேறு வாசல் வழியாக செல்லலாம் என SP  கவர்னரின் பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கூறி இடம் மாற்றி விவரத்தை கூறி ஆலயத்தில் சுவாமி செல்லும் விட்டவாசல் கோபுரத்திற்கு அனைவரும் ஓடிச்சென்று வருகை தந்த தமிழக ஆளுநருக்கு பூர்ணகும்ப மரியாதை கொடுத்து மாற்று வழியாக அலயத்திற்கு சென்ற கவர்னர் ரவி சுவாமி தரிசனம் செய்து விட்டு மேற்கு கோபுரம் வழியாக புறப்பட்டு சென்றார். அதன்பின்னரே காவல்துறையினர் நிம்மதி பெருமுச்சு விட்டனர்.


மேலும் படிக்க: NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்


ஏற்கனவே ஆலய மரபு மீறி உற்சவ கொடி இறங்கியபிறகு கடந்த வாரம் தெப்ப திருவிழாவை ஆலய நிர்வாக அதிகாரி நடத்தினார். மூன்றாம் நாள் தெப்ப திருவிழாவின் போது இரண்டு. பேர் குளத்தில் விழுந்து இறந்தனர். அதில் ஒருவரின் உடலை குளத்தில் இருந்து எடுக்காமலேயே பக்தர்களின் எதிர்ப்பை மீறி தெப்பம் நடத்தியதாக நிர்வாக அதிகாரி கவிதா மீது புகார் எழுந்துள்ள நிலையில், இன்று ஆலய மரபை மீறி கவர்னருக்கு கிழக்கு கோபுர வாசலில் பூர்ண கும்ப மரியாதை கொடுக்க முயன்றபோது தியாகராஜ சுவாமியின் விளையாட்டால் தேன்பூச்சி தாக்குதலில் இருந்து தமிழக ஆளுநரை காப்பாற்றி வேறு வழியாக வரவைத்ததாக பக்தர்கள் பேசி வருகின்றனர்.


மேலும் படிக்க: ஆளுநர் உரைகள்.. சர்ச்சைகள்.. திமுக பதிலடிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR