‘எந்த போலீஸும் எங்களப் பிடிக்க முடியாது’ - முதலாளிக்கு வாட்ஸ் அப் பண்ணிய வடமாநில திருடர்கள்

திருப்பத்தூர் தண்ணீர் கம்பெனி நிறுவத்தில் இருந்து எல்லாவற்றையும் திருடிவிட்டு முதலாளிக்கு திமிராக வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பிய வடநாட்டு இளைஞர்கள்   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 17, 2022, 02:37 PM IST
  • திருப்பத்தூர் தண்ணீர் கம்பெனியில் துணிகர திருட்டு
  • 13 லட்ச பொருட்களோடு பீகார் தப்பிச்சென்ற வட மாநில இளைஞர்கள்
  • ‘எங்கள யாராலும் பிடிக்க முடியாது’ என்று தமிழ்நாட்டு போலீஸுக்கு சவால்
‘எந்த போலீஸும் எங்களப் பிடிக்க முடியாது’ - முதலாளிக்கு வாட்ஸ் அப் பண்ணிய வடமாநில திருடர்கள் title=

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக கோபி என்பவர் தனியார் தண்ணீர் கம்பெனி நடத்தி வருகிறார். அந்தப் பகுதி முழுவதும் இந்த நிறுவனத்தில் இருந்துதான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தண்ணீர் கம்பெனியில் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் வேலைக்கு ஆட்கள் தேவை என கம்பெனியில் நிறுவனர் கோபி விளம்பரம் செய்துள்ளார். 

மேலும் படிக்க | திருட்டு பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு - சினிமாவை விஞ்சிய நண்பனின் துரோகம்!

இதனை அறிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித் மற்றும் நிர்மல் ஆகிய 2 இளைஞர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி கோபியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தங்களுக்கு வேலை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர்களது தேவையை அறிந்து கோபியும் அழைத்துள்ளார். மஞ்சித் மற்றும் நிர்மல் ஆகியோரது ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தர வேண்டும் என்று வேலைக்குச் சேர்வதற்கு நிபந்தனையாக கூறியுள்ளார். விரைவில் தருகிறோம் என்று கூறி இருவரும் வேலைக்கு வந்துவிட்டனர். 

அதுமட்டுமின்றி தண்ணீர் கம்பெனியிலேயே அவர்கள் தங்கிக்கொள்ள வசதியும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் கோபி. ஆனால் இதுவரை அடையாள அட்டை ஆதாரங்களையும் புகைப்படங்களையும் இருவரும் கொடுக்காமல்  இழுத்தடித்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலையில் தண்ணீர் கம்பெனி ஊழியர்கள் வழக்கம் போல் நிறுவனத்திற்கு வந்துள்ளனர். அப்போது கம்பெனியின் சாவி வெளியே வீசப்பட்டுக் கிடந்ததைக் கண்டுள்ளனர். பிறகு சாவியை எடுத்து உள்ளே சென்றுபார்த்த போது, அங்கு, தண்ணீர் பிக்கப் வாகனம், டீசல் 50 லிட்டர், 2 லட்ச ரூபாய் ரொக்கப்பணம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் சாமான்கள், ஒரு சிலிண்டர், எல்.இ.டி டிவி ஆகிய அனைத்தும் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பொருட்கள் திருடு போன சம்பவம் குறித்த தகவலை நிறுவனர் கோபியிடம் ஊழியர்கள் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | தீரன் பட பாணியில் வேட்டையாடிய கும்பல் - கதிகலங்கிய கண்டமங்கலம்..!

உடனடியாக கம்பெனிக்கு வந்த கோபி, அனைவரிடமும் மேற்கொண்ட விசாரணையில், வடமாநில இளைஞர்களான மஞ்சித் மற்றும் நிர்மல் ஆகியோர் அனைத்தையும் இரவோடு இரவோடு திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நாட்றம்பள்ளி காவல்நிலையத்துக்கு புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக வாகனம் உட்பட 13 லட்ச ரூபாய் அளவில் மஞ்சித் மற்றும் நிர்மல் பல பொருட்களைத் திருடிச்சென்றுள்ளனர். 

இந்நிலையில் கம்பெனியின் நிறுவனரான கோபிகு இன்று திடீரென வாட்ஸ் அப் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோவில், நிர்மல் வண்டி ஓட்டபடி இருந்துள்ளார். மஞ்சித் வீடியோ எடுத்தபடி இருக்கிறார். அந்த வீடியோவில் இருவரும், ‘நாங்கள் பீகாரை நோக்கிச் செல்கிறோம். எந்தப் போலீஸாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று பேசியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைக்கும் நிறுவனர் கோபி, வட மாநில இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி தன்னைப் போன்று ஏமாற வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு போலீஸுக்கு சவால் விடுத்து வடமாநில இளைஞர்கள் திருடிவிட்டுத் தப்பிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | Chain Snatching: இனிமே திருடுவ? வழிப்பறி செய்தவனை கம்பத்தில் கட்டி விளாசிய மக்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News