கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. அதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, 105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்த 19487 குடும்பங்களில் உள்ள பெண்கள் இந்த மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைவார்கள். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவுபடுத்தபட்டுள்ள செய்தி, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே மறுவாழ்வு முகாம்களில் (rehabilitation camps) வசிக்கும் குடும்பத் தலைவருக்கு ரூ.1500, எனைய நபர்களுக்கு ரூ.1000, குழந்தைகளுக்கு ரூ.750 என மாதம்தோறும் உதவிகள் வழங்கபட்டு வருகிறது. அது மட்டுமல்ல, முதியோர் உதவிதொகை,கணவனால் கைவிடபட்டவர்களுக்கு உதவிதொகை என மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் பெண்களுக்கு ஏற்கனவே பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், தற்போது கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்து வந்தது. தமிழக அரசு இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே புதிய விண்ணப்பங்களை பெற்று வந்தது.. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | குடும்பத் தலைவிகளுக்கு சர்ப்ரைஸ் -  மாதம் 1000 ரூபாய் - அரசின் திடீர் அறிவிப்பு


பெறப்பட்ட விண்ணப்பங்களும் ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக மேலும் கணிசமான அளவிலான பெண்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படலாம். தகுதியான நபர்களுக்கு அடுத்த மாதம் முதலே பணம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பணம் வழங்கும் தேதியான் 15ம் தேதி என்பதையும் மாற்றலாம் என தமிழக அரசு(TN Government) பரிசீலித்து வருகிறது.  


ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை


செப்டம்பர் 15ஆம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு  செயல்படுத்தி வருகிறது.  இரண்டு மாதங்கள் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்திற்கு தகுதி இருந்தும் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் மேல்முறையீடு செய்தனர்.


தொடக்கத்தில் ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாக இருக்கும் நிலையில், மேல்முறையீடு செய்த மகளிரில்  7.35 லட்சம் பெண்கள் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உரிமை தொகை திட்டத்தில்  பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  


முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டு,  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai Thittam) என்று அறியப்படுகிறது.


மேலும் படிக்க | Med Tech: வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புடன் மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னேறத் துடிக்கும் இந்தியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ