தமிழக அரசு வழங்கும் பெண்களுக்கான இரு சக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிப்.10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டு வருமானம் 2 லட்சத்து 50,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பவர்களுக்கு இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது 25,000 ரூபாய் என தமிழக அரசு அறிவித்தது. திட்டத்தின் கீழ் பலனடைய பெண்கள் பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில், விண்ணப்பிக்க நேற்று கடைசி தினம் என்று கூறி இருந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் பிப்.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, முதற்கட்டமாக மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும், 2018-19-ம் நிதியாண்டில் முதற்கட்டமாக ஒரு லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெற அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஒரு லட்சம் இலக்கை எட்டாததால் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.