சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் (TN School) 1,6,9 ஆம் வகுப்புகளுக்கு வரும் 17 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும். அதாவது ஒரு பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாற்றம் பெற்று வரும் மாணவ-மாணவிகள் சேர்க்கை, அடுத்த வாரம் திங்கள் கிழமை தொடங்க உள்ளது. அதேபோல மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை 24 ஆம் தேதி தொடங்குகிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (K. A. Sengottaiyan) தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க சாத்தியக்கூறு இல்லை. கொரோனா தாக்கம் (Coronavirus) குறைந்த பிறகே பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் இறுதி முடிவெடுப்பார் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் (School Education Minister) கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


ALSO READ |  குழந்தைகளின் நலன் தான் முக்கியம்!! தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை


ALSO READ |  புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம்; அடுத்த மாதம் தான் புத்தகம் கிடைக்கும்: கல்வி அமைச்சர்


முன்னதாக, இந்த ஆண்டு கடைசி வரை பள்ளி (School), கல்லூரிகளை (College) திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் (Secretary of Higher Education) அமித் காரே தெரிவித்துள்ளார்.  இன்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் (Human Resource Development) நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து இறுதி அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் மத்திய அரசு தெளிவுப்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.