சென்னை: நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மட்டுப்பட்டு வரும் நிலையில் தற்போது AY 4.2 என்ற புதிய வகை உருமாறிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் முன்பு இருந்த கொரோனா வைரசை விட வேகமாக பரவும் என்று கூறப்படுவது கவலைகளை அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், தமிழகத்தில் உருமாறிய AY.4.2 கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதிபட தெரிவித்துள்ளார்.


சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில்,  100 கிலோ வாட் திறன்கொண்ட மின்மாற்றியை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, அதை மக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்த தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.


தமிழகத்தில் இதுவரை டெங்கு நோய் பாதிப்பால் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர தெரிவித்தார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்மருத்துவமனைகளில் பிரத்யேகமான வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.


 Also Read | COVID-19 Update: இன்றைய கோவிட் பாதிப்பு; 2021 நவம்பர் 5 


கொரோனா பாதிப்பு தொடர்பாக பேசிய அமைச்சர், தமிழகத்தில் இதுவரை 71% நபர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றும், இந்த மாத இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்துவதை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் நாளை 4 இடங்களுக்கு நேரில் சென்று துவங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.


அதே போன்று தமிழகத்தில் இதுவரை புதிய வகை A.Y.4.2 கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர், இந்தியாவில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் தமிழகத்தில் இந்த வைரஸ் பரவி உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.


தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாவிற்கு தமிழக புதிய ஆளுநர் சட்ட ஆலோசனை பெற்று ஒப்புதல் கொடுத்த உடனே, அது இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.


ALSO READ | கொரோனாவை குணமாக்கும் Molnupiravir மாத்திரைக்கு அங்கீகாரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR