தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் உரை மீது மானியக் கோரிக்கை விவாதங்களும், அனைத்து துறைகளுக்குமான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் முன்னாள் எம்ஏல்ஏக்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவ உதவித் தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் முக.ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக அரசும் பரிசீலனை செய்தது. இதனால் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பென்சன் உயர்வு மற்றும் மருத்துவ உதவித் தொகை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆளுநருக்கு ரூ.5 கோடி எல்லாம் கொடுக்க முடியாது - பிடிஆர் அதிரடி


இந்த கூட்டத்தொடர் முடிவதற்குள்ளாகவே அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தலைமை செயலக வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. இந்நிலையில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார். அந்த அறிவிப்பில் முன்னாள் எம்எல்ஏக்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் மருத்துவப் படி 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்தபடும், குடும்ப ஓய்வூதியம் 15 ஆயிரமாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். 


சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிக்கும்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, முன்னாள் சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு, ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும்.


அதேபோல், குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.12,500 என்பது, ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.


மேலும் படிக்க | அண்ணாமலை மீது அடுத்து வழக்கு தொடரப்போகும் திமுகவின் முக்கிய புள்ளி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ