தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்ட 17 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லஞ்சம் பெற்றதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி திமுக மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதாக கூறினார். மேலும், திமுகவின் மீது சுமத்திய அவதூறுகளுக்கு ஆதாரங்களைக் கேட்டு திமுக சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க | அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னர் - தொல். திருமாவளவன்!
அதில், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றதுடன் இழப்பீடாக 500 கோடி ரூபாய் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என கெடுவும் விதிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை திமுகவின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார் என அறிவித்தார்.
அவரின் இந்த அறிவிப்புக்கு பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. 48 மணி நேரத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுகவினருக்கு எதிராக சொத்துப் பட்டியல் குறித்து தகவல் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நிச்சயமாக நானும் வழக்கு தொடர்வேன். அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கோவிலில் திருமணம் செய்தால் 4 கிராம் பொன் தாலி - சேகர்பாபு அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ