பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்ட அமைச்சர் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளார்.
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் எந்த கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது, யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனைகள், மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது போன்ற முக்கிய அறிவிப்புக்களை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறைத் தொடர்பாக பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் விவரங்களை பார்ப்போம்.
- தமிழ்நாட்டில் எந்த கோவில்களில் இனி முடி காணிக்கைக்கு இனி கட்டணமில்லை.
- மொட்டை அடிப்பதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகமே வழக்கும்.
- மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயில்களில் திருமணம் நடத்த கட்டணம் இல்லை.
- கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபதிற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
ALSO READ | தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை பக்தர்கள் மகிழ்ச்சி.!
- இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 150 கோடியில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.
- அனைத்து கோயில்களிலும் சூரிய ஒளி வெப்ப விளக்குகள் தேவைக்கு ஏற்ப பொருத்தப்படும்.
- சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி போன்ற கோயில்களில் முழுநேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும்.
- பயிற்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் ஊக்கத்தொகை, இனி 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- 12,959 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக ரூ. 13 கோடி ஒதுக்கப்படும்.
-திருக்கோயில்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த 1500 தற்காலிகமாக பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்யப்படுவார்கள்.
- அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
ALSO READ | ₹250 கோடி மதிப்புள்ள சென்னை வடபழனி கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர் பாபு
இதுபோன்ற பல முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR