சுவாதி கொலை... ராம்குமார் தற்கொலை - மீண்டும் விசாரணை; ரூ. 10 லட்சம் இழப்பீடு!
புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவும், ராம்குமாரின் தந்தைக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென் பொறியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 2016ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு, மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய புழல் சிறை வார்டன் பேச்சிமுத்து ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தில், ராம்குமார் கம்பியை கடித்த போது லத்தியால் தள்ளி அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஜூஸில் ஆசிட்... காதலனை கொன்ற காதலி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி
இதனையடுத்து ஆணையம் இன்று (அக். 31) பிறப்பித்துள்ள உத்தரவில், "சிறையில் குறைந்த ஊழியர்கள் உள்ளதால் ராம்குமார் மரணத்திற்கு அவர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. அரசுக்கு இதில் பொறுப்பு உள்ளது.
சிறையில் போதியளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அரசின் கடமை. ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை" எனக் குறிப்பிட்டுள்ளது.
ராம்குமார் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு 10 லட்சம் ரூபாயை ஒரு மாத்தில் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும் படிக்க | கோவை போலீசாரை பாராட்டி குட்டும் பாஜக அண்ணாமலை: செய்தியாளர் சந்திப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ