கொரோனாவால் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 216 பேரும், தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மக்களை பீதியில் ஆழ்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 280-க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகிய நிலையில், இந்தியாவில் செவ்வாயன்று நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 1,619 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1420  பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 150 பேர் குணமடைந்துள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், கொரோனாவால் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளார். அடுத்தபடியாக, கேரளாவில் 241 பேர் பாதிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்து இருவர் உயிரிழந்துள்ளார். மூன்றாவதாக, தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் குணமடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு அதிகரித்ததால் மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கபட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. தொடக்கத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது. ஆனால், டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்று நெல்லை மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பலர் திரும்பியதில், அவர்களில் 50 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 


இதையடுத்து, கர்நாடகா, டெல்லி போன்றவற்றை முந்தி, நாட்டிலேயே 3-வது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. கொரோனாவால், மகாராஷ்டிராவில் அதிக இறப்புகள் (10) பதிவாகியுள்ளன. குஜராத் (6), பஞ்சாப் (4), மத்தியப் பிரதேசம் (4), கர்நாடகா (3), மேற்கு வங்கம் (3), டெல்லி (2), கேரளா (2), தெலுங்கானா (2) மற்றும் ஜம்மு-காஷ்மீர் (2). தமிழகம், பீகார் மற்றும் இமாச்சலப் பிரதேசம் தலா ஒரு இறப்பைப் பதிவு செய்துள்ளன.