சென்னை: யூடியூபர் கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக, கிஷோர் மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் திமுக ஐடி விங்க் நிர்வாகி புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் ஜூன் மாதம் 17ம் தேதி கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசின் நடவடிக்களை பார்த்து, கிஷோர் சாமியால் சமூக வலைத்தளங்களில் (Social Media) பாதிப்புக்கு உள்ளான பலரும் புகார்களை அளிக்கத் தொடங்கியுள்ளனர். சினிமா நடிகை ரோகிணி, பெண் பத்திரிக்கையாளர்கள் சிலரும் கிஷோர் சாமி மீது ஏற்கனவே புகாரளித்திருந்தனர்.


அவற்றுடன் இப்போது பெறப்பட்ட புகார்களை சேர்த்து பல காவல் நிலையங்களில் விசாரணை ஆரம்பித்துள்ளது.  புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கிஷோர் சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


“குண்டர் தடுப்பு சட்டம்” என்று வழக்குமொழியில் அறியப்படும் சட்டத்தின் உண்மையான பெயர், “தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்” என்பதாகும்.


Also Read | Manikandan Bail Plea: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி


தமிழ்நாட்டில் (Tamil Nadu) கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்களை தடுப்பதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  


இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றங்களைச் செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.


குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவரை தொடர்ந்து 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும்.  இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர் நிபந்தனைகளை மீறினால், இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.


குண்டர் சட்டத்தில் அடைத்தால் பல்வேறு உரிமைகள் மறுக்கப்படும். விசாரணை இன்றி ஒரு வருடம் சிறைவாசம்.  பிணை கிடையாது, நீதிமன்ற விசாரணையும் கிடையாது. கைது செய்யப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளமுடியாது. எனவே, கிஷோர் கே சாமிக்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளது.


Also Read | Black Fungus: கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR