தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அறிமுகம் செய்தது. ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்ற மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நாடு  முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் குடும்ப அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய குடும்ப அட்டைகளை களை மக்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளது. இந்த திட்டத்தை முதல் கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் ஆறு மாநிலங்களில் தற்போது அமல்படுத்தியுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு  செய்தது.


இதற்கிடையில், தமிழகத்தில் பரிட்சார்த்த முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் கடந்த 1.1.2020 முதல் 29.2.2020 வரை அமல்படுத்தப்பட்டது.  தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மொத்தம் 9 லட்சம்  குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்கள், அந்த மாவட்டங்களுக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் 9 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில் 9 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து வாழ்பவர்கள் பயன் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதில் எந்த சிக்கலும் இல்லை. எனவே, இந்த திட்டம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


READ | கிராமப்புற இந்தியாவில் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்க மெகா திட்டம் அறிமுகம்!


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை செயல்படுத்துவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும் என அவர் கூறினார்.