Tamil Nadu Latest News Updates: தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் (Periyar 51st Memorial Day) இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் தந்தை பெரியாரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) சென்னை, அண்ணா சாலையில் உள்ள அரசு பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை அருகில் இன்று தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, சென்னை, பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம். ஆர். ராதா மன்றத்தில் தந்தை பெரியார் அவர்களின் 51 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து, பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மய்யம் ஆகியவற்றையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


அந்த வகையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் (Trichy Latest News) அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ (Durai Vaika) மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு துரை வைகோ போட்டியளித்தார்.


மேலும் படிக்க | பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும்? ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்!


பெரியார் மீதான விமர்சனங்களுக்கு என்ன காரணம்?


பெரியார் இறந்து காலம் கடந்தும் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருப்பதற்கு காரணம் என்ன என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்,"தந்தை பெரியார் இல்லாமல் தமிழகத்தை பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்களுக்கு கல்வி உரிமை கிடைத்திருக்காது. பொருளாதாரம் முன்னேற்றம் அவரால் வந்தது. இன்றும் சில சக்திகள் அவரை கொச்சைப்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர். தவறான கருத்துக்களை கூறுவதற்கும் சிலர் இருக்கின்றனர்.


பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, பிற்படுத்தப்பட்ட மக்கள் பட்டியலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால் அதற்கு கேட் பாஸ் கொடுத்தது பெரியார்தான். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எனவேதான், 4 வருடத்திற்கு முன்னே நான் ஒரு கருத்தை வைத்தேன். அதாவது, பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என்ற கருத்தை நான் வைத்தேன். காரணம் கடவுளை வழிபடுபவர்கள் கூட பெரியாரை போற்றுகிறார்கள்.


'இந்தி கட்டாயம் - நிர்பந்திக்கும் மத்திய அமைச்சர்'


'மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் இந்தி கட்டாயம் படிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உங்களுக்கு உரிய நிதியை விடுவிப்பேன்' என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எங்களிடம் நேரடியாகவே நிர்பந்தம் செய்தார். ஆனால், நாங்களோ இரு மொழிக் கொள்கை என்பது திராவிடக் கொள்கையின் பிரதானமான கொள்கை. இதன் காரணமாகத்தான் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆங்கிலம் பேசும் திறன் பெற்று உலகமெங்கும் கோலோச்சுகின்றனர்" என்றார். 


தொடர்ந்து, திமுக கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது என்றும்   ஏனென்றால் மக்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் அவர் தெரிவித்திருக்கிறார் என்றும் துரை வைகோ கூறினார். 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும் என்றும் அதிகாரியாக இருந்தவர் பொய் சொல்ல மாட்டார் எனவும் துரை வைகோ தெரிவித்தார்.


மேலும் படிக்க | போக்குவரத்து ஊழியர்களுக்கு Good News.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ