முதல் `சட்டசபை கூட்டத்தொடர்` -ஆளுநர் உரையை தி.மு.க. புறக்கணிப்பு!!
தமிழ்நாடு சட்டமன்ற அமர்வில் இன்று ஆளுநர் உரையின் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதுடன், தி.மு.க. தலைவர்கள் கவர்னர் உரையை புறக்கணித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்ற அமர்வில் இன்று ஆளுநர் உரையின் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதுடன், தி.மு.க. தலைவர்கள் கவர்னர் உரையை புறக்கணித்துள்ளனர்.
ஆண்டுதோறும் சட்டசபை முதல் கூட்டத் தொடரில், ஆளுனர் பங்கேற்று உரையாற்றுவது வழக்கம், அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான இன்று நடைப்பெறும் முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று உரையாற்றினார்.
கூட்ட தொடரில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று காலை 9.55 மணியளவில் சட்டசபை வளாகத்திற்கு வந்த அளுநரை , சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் சென்றனர்.
சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர் இருக்கைக்கு வந்த ஆளுநர், சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களை பார்த்து வணக்கம் செலுத்தினார்.
அதன்பிறகு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. 10 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை துவங்கினார். வணக்கம், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தமிழில் கூறி தனது உரையை துவங்கினார்.
அதைத்தொடர்ந்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி, விவாதத்தின் போது உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என கூறிய ஆளுநர், தமிழில் உட்காருங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
அப்போது,ஆளுநரை பேசவிடாமல் அவையில் கூச்சல், குழப்பத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.