தமிழகத்திற்கு விரைவில் புதிய கவர்னரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்துக்கு பொறுப்பு கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவை கடந்த மாதம் 2-ம் தேதி மத்திய அரசு நியமனம் செய்தது. இதையடுத்து அவர் தமிழக பொறுப்பு கவர்னராக பதவி ஏற்றார். இந்நிலையில் தற்போது உடல் நலக்குறைவால் முதல் - அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. 


முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை தொடர வேண்டும் என்றும்,  முதல் - அமைச்சர் மேலும் நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் அப்பல்லோ நிர்வாகம் கூறியிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு விரைவில் புதிய முழு நேர கவர்னரை நியமிப்பது அவசியம் என மத்திய அரசு வட்டாரம் கருதுகிறது. எனவே எந்த நேரத்திலும் தமிழ்நாட்டுக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த 11-ம் தேதி முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாகளை நிதி மந்திரி ஓ.பன்னீர் செல்வத்துக்கு பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவ் ஒதுக்கி உத்தரவிட்டார். அதே நேரத்தில் முதல் - அமைச்சர் பதவியில் ஜெயலலிதா தொடருவார் எனவும் அவர் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.