உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணும் பணி சில இடங்களில் தாமதமாக  ஆகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தது.


9 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அந்தவகையில் நடந்து முடிந்த 29 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. 


முதல் கட்ட தேர்தலின்போது, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 30 வார்டுகளுக்கு, நேற்று முன்தினம் நடந்த தேர்தலோடு, மறுவாக்குப்பதிவு நடந்தது. இதில் 72.70 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.


அனைத்து வாக்குப்பெட்டிகளும் தமிழகத்தில் உள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.


இந்த வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறை இன்று 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு அறை திறக்கப்பட்டது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் நடக்கும் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட யாரும் பார்க்க முடியாது.


இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 315 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.  எனினும், ஒரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகியுள்ளது. 


தேர்தல் அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டில் குளறுபடியால் புதுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகியுள்ளது, மதுரையில் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வராததால் தாமதம் வாக்கு எண்ணிக்கையில் தாமதம், ஆரணி ஒன்றியத்தில் அதிகாரிகள் குளறுபடியால் வாக்கு எண்ணிக்கை தாமதம், செய்யாறு தபால் வாக்கு பெட்டியின் சாவி இல்லாததால் வாக்கு எண்ணிக்கை தாம‌தம், திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை திறக்க முடியாத‌தால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகியுள்ளது.


 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.