TN Lockdown: ஜூலை 5 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு அளித்துள்ள தளர்வுக்ளின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:
வகை 1-ல் வரும் 11 மாவட்டங்களில் முன்பு அளிக்கப்பட்டதை விட தற்போது அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன:
- தேநீர் கடைகள் (எடுத்துச்செல்ல மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி உண்டு.
- ஹார்ட்வேர், புத்தக கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 வரை இயங்க அனுமதி.
- பாத்திர கடைகள், ஃபான்சி பொருட்களுக்கான கடைகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி
- அரசின் அத்தியாவசிய துறைகள் 100%, மற்ற துறைகள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி
- தனியார் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்
- இதர தொழிற்சாலைகள் 33%, ஐ.டி. நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் செயல்படலாம்
- கட்டுமான நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் செயல்படலாம்
- அழகு நிலையங்கள், குளிர்சாதன வசதியின்று 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்
- பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இனிப்பு, கார வகைகளை விற்கும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்
- திரையரங்குகளில் வட்டாட்சியர் அனுமதி பெற்று வாரம் ஒரு நாள் பராபரிப்பி பணிகள் செய்யலாம்
வகை 2-ல் உள்ள அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கான தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்:
- பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தனியார், பாதுகாப்பு சேவை அலுவலங்கள் இ-பதிவு செய்யாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் 50% திரனில் இயங்கலாம்.
- சாலையோர உணவுக் கடைகள், பார்சல் சேவை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.
- செல்பெசி மற்றும் அது சார்ந்த கடைகள் காலை 9 முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.
- கட்டுமானப் பணிகளை 50% ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்.
ALSO READ: Black Fungus: கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது
வகை 3-ல் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கான தளர்வுகளின் முக்கிய அம்சங்கள்:
- அனைத்து தனியார் நிறுவனங்களும் 100% ஊழியர்களுடன் இயங்கலாம்.
- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% ஊழியர்களுடன் செயல்படலாம்.
- ஜவுளிக் கடைகள் குளிர்சாதன வசதியின்றி காலை 9 மனி முதல் மாலை 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
- மத வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி
- வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி.
- வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.
- தனியார், பாதுகாப்பு சேவை அலுவலங்கள் இ-பதிவு செய்யாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் 50% நபர்களுடன் இயங்கலாம்.
மக்கள் கொரோனா நெறிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது என அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் (MK Stalin) மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ALSO READ: TN Delta Plus Corona: தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR