தமிழ்நாடு ஊரடங்கு செய்திகள்: மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை பார்க்கும்போது, ​​மாநிலத்தில் பேருந்து (Tamil Nadu Bus Services) சேவைகளை நிறுத்தி வைக்கப்பட்டதை ஜூலை 31 வரை நீட்டிக்க தமிழக அரசு இன்று (திங்கள்கிழமை) முடிவு செய்தது. முன்னதாக, பேருந்து சேவைகள் ஜூலை 15 வரை நிறுத்தி வைக்கப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையும் படியுங்கள் - பிரேக் இல்லாமல் ஓடும் அரசு பஸ்... தமிழக அரசின் அவல நிலை?


நேற்று ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் 4,244 புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளதால், பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,38,470 ஆக உள்ளது. அதேபோல நேற்று 68-க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டதால், இறப்பு எண்ணிக்கையை 1,966 ஆக உள்ளது. 


ஏறக்குறைய 1.4 லட்சம் கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த மாநில பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் (COVID-19 Updates) 4,328 பேருக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல இன்று மாநிலம் முழுவதும் 66 பேர் கொரோனா நோயால் (Corona Death) இறந்துள்ளனர். தமிழகத்தில் (Tamil Nadu) இறப்பு எண்ணிக்கை மொத்தமாக 2,032 ஆக அதிகரித்து உள்ளது.


இதையும் படியுங்கள் - மதுரையில் முழுஊரடங்கு மேலும் 2 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு..!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் (Coronavirus in Tamil Nadu) பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இதுவரை தமிழகத்தில் 16,54,008 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பில், இதுவரை 92,567 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதேநேரத்தில் 48,196 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவிட் -19 (COVID-19) குறித்து ஆலோசனை வழங்கும் சுற்றறிக்கை தமிழ் மாநில அரசு திங்களன்று வெளியிட்டது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 24.03.2020 முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் 31.07.2020 வரை ஊரடங்கு (Tamil Nadu Lockdown) நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூலி 31 வரை தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது. தமிழக அரசின் முடிவுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.


இதையும் படியுங்கள் - மதுரை: கொரோனாவை எதிர்த்து போராடும் கோயில் நகரம்