Tamil Nadu Lok Sabha Election Result: மதுரையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு அதிமுக வேட்பாளர் சரவணன் புகார் மனு அளித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். மதுரை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட வந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் மதுரையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலையில் முதலில் தொடங்கிய தபால் ஓட்டுகள் எண்ணிக்கையின் போது, பல தபால் ஓட்டுகள் கவர் ஒட்டப்படாத நிலையில் பிரிந்து இருந்ததது. வாக்களித்தவரின் கையெழுத்துகள் அடித்தல் திருத்தலுடன் இருந்தது, பல சீரியல் நம்பர்கள் திருத்தப்பட்டு இருந்தன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: வேலூரில் மன்சூர் அலிகான் பெற்ற வாக்குகள் எத்தனை?


இதனைச் சுட்டிக் காட்டிய போது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்வது போல், தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் பேச்சு இருக்கிறது. தொடர்ந்து பிற வாக்குகளின் எண்ணிக்கையிலும் தவறுகள் நடைபெறவும், முடிவுகள் மாற்றி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதனால்,
மதுரை பாராளுமன்ற தேர்தல், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, இந்திய தேர்தல் கமிஷனுக்கு மனு அளிக்க உள்ளோம் என்று டாக்டர் சரவணன் பேட்டி அளித்தார்.


இதனை தொடர்ந்து பேசிய மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன், மதுரையில் இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நான்கு சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு சுற்றுகள் முடிவுகளும் இந்திய கூட்டணி வேட்பாளரான எனக்கு சுமார் 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வாக்களித்திருக்கிறார்கள். இதே சதவீதம் தான் தொடரும் என நினைக்கிறேன். முதல் சுற்றில் இருந்து தொடர்ச்சியாக 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருக்கிறோம். 


இரண்டு லட்சம் வித்தியாசத்தில் கடந்த முறையை விட கூடுதல் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளராக என்னை வெற்றி பெற செய்வார்கள் என நம்புகிறோம். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மோடியின் மீடியாக்கள் சொன்ன உண்மையை இன்றைக்கு வாக்காளர்கள் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் தற்போது வந்து கொண்டிருக்கிற செய்தி என்றார்.


மேலும் படிக்க | Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்முவில் இரண்டு இடங்களில் பாஜக முன்னிலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ