அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர ஆளுநர் அனுமதியளிக்காதது ஏன்? - பொன்முடி
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தொடரகோரும் தமிழக அரசின் கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பது ஏன்? என்று அமைச்சர் பொன்முடி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பொன்முடி அறிக்கை
தமிழக அமைச்சர் பொன்முடி ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி மே 31 ஆம் தேதி ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு முதலமைச்சர் அளித்த பதில் கடிதத்தில் அமைச்சரை நீக்கவோ நியமிக்கவோ முதலமைச்சருக்கு மட்டும் தான் அதிகாரம் இருக்கிறது. அரசியல் சாசனத்தின்படி இதில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அரசியல் சாசனப்பிரிவு 164(1)-ஐ மேற்கோள் காட்டியிருந்தார். மேலும், அந்த கடிதத்தில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்ககூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரமும் முதலமைச்சருக்கு தான் இருக்கிறது, ஆளுநருக்கு இல்லை என்பதையும் தெரிவித்திருந்தார். குஜராத் அமைச்சராக இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா மீதும் வழக்கு நிலுவையில் இருந்ததை அந்த கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டி ஆளுநருக்கு அரசியல் பாடம் எடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி இலக்கா மாற்றம்... அரசுக்கு மீண்டும் கொடைச்சல் கொடுக்கிறாரா ஆளுநர்?
ஆளுநருக்கு சரமாரி கேள்வி
மேலும், அந்த கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் கடிதம் எழுதும் ஆளுநர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர கோரப்பட்டிருக்கும் அனுமதி தொடர்பான கோப்பில் கையெழுத்திடாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். அதனை ஏனோ அற்பத்தனமாக மறைத்துவிட்டு முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மட்டும் லீக் செய்திருப்பது ஏன்?.
செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யுமாறு செய்த பரிந்துரைக்கு செந்தில் பாலாஜி மீதான விசாரணையை சுட்டிக்காட்டி சரியான காரணம் கேட்டிருக்கிறார். இது மாநில அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாக உள்ளது. அப்பட்டமான அரசியல்சாசன மீறல்.
முதலமைச்சருக்கு முழு அதிகாரம்
அமைச்சர்களை நீக்கவும் நியமிக்கவும் எப்படி முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறதோ அதேபோல் தான் அமைச்சர்களின் இலாக்களை மாற்றுவதிலும் முழு அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே இருக்கிறது. இது குறித்து முதலமைச்சரை கேள்வி கேட்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொண்ட அவர், அதற்கு விரோதமாக செயல்படுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. இது கடும் கண்டனத்துக்குரியது என்று பொன்முடி காரசாரமாக அறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ