Tamil Nadu Minister Ponmudi Latest News Updates: பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து, அங்கு அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று (டிச. 3) மாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். விழுப்பரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோரும் உடனிருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி,"விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவ.30, டிச.1 ஆகிய நாட்களில் பெய்த மழை, எப்போதும் இல்லாத அளவிற்கு இருந்துள்ளது. வரலாறு காணாத மழை. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் அரசுத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். 


மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்


விழுப்புரம் மாட்டத்தில் தங்கி பணிகளை கவனிக்க மின்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்களை தமிழக முதல்வர் அனுப்பியுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளை வெள்ள சேதங்களை பார்வையிட்டார். தொடர்ந்து முதல்வரும் ஓய்வின்றி ஆய்வு மேற்கொண்டார். அரகண்டநல்லூர் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பார்வையிட்டு பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டார். தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சாலை வசதி சரி செய்யப்பட்டு போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. 26 சாலைகள சேதமடைந்தன. சாலைகள் விரைவில் முழுமையாக சரி செய்யப்படும்.


மேலும் படிக்க | பனையூரில் நிவாரணம்... வச்சு செய்த நெட்டிசன்கள்... மீம்ஸ் மழை - விஜய் கொடுத்த பதில்


நிவாரண முகாம்களும், மின் இணைப்பும்...


தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகள், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 67 நிவார முகாம்களில் 4,907 பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடலோர பகுதிகளில் பாதிப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.


மின் விநியோகம் பொறுத்தவரை அதனை கவனிக்கதான் மின்துறை அமைச்சரை விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் அனுப்பியுள்ளார். மற்ற மாவட்டங்களில் இருந்து மின்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் முழுமையாக மின் இணைப்பு வழங்கப்படும்.


நிவாரண உதவிகள் அறிவிப்பு


விக்கிரவாண்டியில் 6 பேர், திருவெண்னைநல்லூரில் 2 பேர், விழுப்புரத்தில் 5 பேர், வானூரில் ஒருவர் என மாவட்டத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விரைவில் அரசு அறிவித்த நிதியுதவி வழங்கப்படும். நெற்பயிர்களுக்கு ரூ.17 ஆயிரம், மரங்களுக்கு ரூ.22,500, மானாவரி பயிர்களுக்கு ரூ.8,500 நிவாரனம் வழங்கப்பட உள்ளது. கால்நடை நிவாரணமாக ரூ.37,500 வழங்கப்பட உள்ளது. விழுப்புரத்தில் 97 மாடுகள் உயிரிழந்துள்ளன, ஆடுகள் 352 உயிரிழந்துள்ளன. ஆடு, மாடு உயிரிழப்புக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். மாவட்டத்தில் 37 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளன. அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.


மேலும் படிக்க | ஒரு ரூபாயை கூட ஒதுக்காத மத்திய அரசு - காலியாக இருக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி... அதிர்ச்சி!


மாவட்டத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது. சில இடங்களிலும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கூரை வீடுகள் சேதத்திற்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். சான்றிதழ் குறித்து புகார் அளித்தால், முகாம்கள் நடத்தி அவை மீண்டும் வழங்கப்படும். தனி சிறப்பு முகாம் நடத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கப்படும்" என்றார்.


சேற்றை அடித்த சம்பவம்


அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த சம்பவம் குறித்தும் அவர் பேசினார். அதில்,"சேற்றை யார் அடித்தது என எல்லோரும் தெரியும். எல்லோர் மீதும்தான் சேறுப்பட்டது. வேண்டும் என்றே அரசியல் செய்ய இதுகுறித்து பேசுகிறார்கள். சேற்றை அடித்தவர் எந்த கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும்.
அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சாலை மறியல் செய்யப்பட்டது. யார் அரசியலாக்க நினைத்தாலும், வெள்ள தடுப்பை நிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.


எனக்காக பத்திரிகையாளர்கள் புகார் கொடுக்க வேண்டும். இதனை நாங்கள் பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை. நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும் என கூறுகின்றனர். மத்திய அரசிடம் சொல்லி நிவாரணத்தை வாங்கி கொடுக்க வேண்டும். நிவாரணம், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஓரிரு நாட்களில் செய்யப்படும். மாணவர்கள் பாதிக்கப்பட்டக்கூடாது என்பதற்காக நாளை பள்ளி, கல்லூர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது" என்றார்.


சேகர்பாபு விளக்கம்


அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அடித்த நபரின் பெயர் ராமர் என்கிற ராமகிருஷ்ணன் (24) என்று இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறினார். இவரது சித்தி விஜயராணி என்பவர் பாஜகவில் உள்ளார் என்றும் அதன் காரணமாக ராமர் என்கிற ராமகிருஷ்ணன் பாஜக அனுதாபியாக செயல்பட்டு வருகிறார் என்றும் சேகர்பாபு குற்றஞ்சாட்டியிருந்தார். அரசியல் தூண்டுதல் குறித்து போலீஸ் விசாரணை செய்து வருவதாகவும், சேற்றை அடித்தது பொதுமக்கள் அல்ல என்றும் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.


மேலும் படிக்க | திருவண்ணாமலையில் தொடரும் பாதிப்பு... மீண்டும் மண்சரிவு... பதறவைக்கும் காட்சிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ