உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன் மற்றும் கடம்பூர் ராஜூ..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் நர்மதா நதியின் கரையோரத்தில், சர்தார் சரோவர் அணை அருகே சர்தார் வல்லபாய் பட்டேலின் 597 அடி உயரமான சிலை சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது, உலகில் உள்ள சிலைகளில் இதுவே மிகப்பெரியது என்று கருதப்படுகிறது. சாதாரண மனிதனின் உயரத்தை விட நூறு மடங்கு அதிகமான உயரம் என்றும், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இருமடங்கு உயரமுடையது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் ஆயிரக்கணக்கான கிராமங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட இரும்பைக் கொண்டு வந்து "இரும்பு மனிதர்" பட்டேலின் சிலை நிறுவப்பட்டுள்ளது.


இந்த சிலையை சர்தார் வல்லபாய் பட்டேலின் 143-வது பிறந்தநாள் தினமான இன்று திறந்து வைத்தார். சர்தார் வல்லபாய் பட்டேலின் "Statue of Unity" திறப்பு விழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள அமைச்சர்களுக்கு அழைப்புகள் விடுக்கபட்டிருந்தது. தமிழகத்தில் பாஜகா அமைச்சர்கள் மற்றும் தமிழக முதலவர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்ததது. ஆனால், தமிழக முதலவர் கலந்து கொள்ளாத நிலையில், தமிழகம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் அதிமுக சார்பில் தமிழக மைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.