சென்னை நகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் (Police Commissioner Mahesh Kumar Aggarwal) சனிக்கிழமையன்று பொலிஸ் பணியாளர்களுக்காக ஆன்லைன் யோகா வகுப்புகளைத் தொடக்கி வைத்தார். காவல் துறையினர் COVID-19 தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை குறைக்க இந்த யோகா ஆன்லைன் வகுப்புகள் (Online Yoga Classes) உதவியாக இருக்கும் என அவர் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை பண்டைய இந்தியாவில் மக்களின் நல்வாழ்வுக்காக அறிமுகப்படுத்தப்பட்டன. இவை நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இந்த நுட்பங்களின் பயனை உலகம் அங்கீகரித்துள்ளது. சாதாரண நேரங்களில் இந்த நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. எனினும், தொற்றுநோய் பரவியுள்ள இது போன்ற ஒரு காலத்தில், இவற்றின் தேவை இன்னும் அதிகமாகிறது. யோகா, பிராணாயாமம் மற்றும் தியானத்தின் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும்” என்று திரு அகர்வால் கூறினார்.


ஆர்ட் ஆப் லிவிங் (Art Of Living) அறக்கட்டளையின் ஒரு குழு நடத்திய நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள், இணை ஆணையர்கள் மற்றும் 12 போலீஸ் மாவட்டங்களின் துணை ஆணையர்கள் முதல் இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகள் வரை பல போலீஸ் பணியாளர்கள் பங்கேற்றனர்.


ALSO READ:யோகா, தியானம்: தொற்றுக்கான மிகச்சிறந்த துணை சிகிச்சைகள் – உலக வல்லுநர்கள்


காவல் துறை நடத்திய இந்த ஆன்லைன் யோகா பயிற்சியில் அனைத்து போலீசாரும் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர்.