விளையாட்டு பல்கலைக்கழகம்: 18 வகையான இளநிலை முதுகலை மற்றும் எம்பில் படிக்க விண்ணப்பிக்கலாம்
நாளை முதல் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (Sports University) சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: நாளை முதல் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (Sports University) சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாட்டிலேயே விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் (Tamil Nadu Physical Education and Sports University) ஆகும்.
இந்த விளையாட்டு பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசால் 2005 ஆண்டு உடல்கல்வியியல் மற்றும் விளையாட்டுக்கள் துறைகளுக்கென சென்னையில் அமைக்கப்பட்டது.
ALSO READ | இறுதி கல்வி ஆண்டு தவிர அனைத்து UG and PG செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்த தமிழக அரசு
இந்த பல்கலைக்கழகம் மூலம் 18 வகையான இளநிலை முதுகலை மற்றும் எம்பில் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை (Admission application) குறித்த உடற்கல்வி பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகமத்தில் சேர tnpesu.edu.in என்ற இணையதள மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.
ALSO READ | BIG NEWS! ஆகஸ்ட் 10 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்!!
நாளை துவங்க உள்ள சேர்க்கை சுமார் ஒரு மாதம் வரை இருக்கும். அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
பொதுப்பிரிவு மாணவர்களுக்கு - ரூ. 500
எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு - ரூ. 250