PMKSY மோசடி: கடலூரில் பல அதிகாரிகளிடம் CB-CID தீவிர விசாரணை!!
PMKSY ஊழலில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் கடலூரிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை செப்டம்பர் 1 ஆம் தேதி சிபி-சிஐடி (CB-CID) போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி: PMKSY நிதியை சிலர் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்குப் பின்னர், பயனாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பல விவசாயிகள் அல்லாதவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணையில் மோசடி (Scam) நடந்திருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் சுமார் 12 வடக்கு மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளதாகத் தெரிகிறது.
ஏப்ரல் மாதத்திலிருந்து பயனாளிகள் பட்டியலில் 80,752 பேர் சேர்க்கப்பட்ட கடலூரிலிருந்து புகார் எழுந்தது. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தின் விசாரணையில் 3500 பேர் தவிர மற்ற அனைவரும் போலியாக சேர்க்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது.
அதிர்ச்சியூட்டும் வகையில், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 40,000 க்கும் மேற்பட்டவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் கடலூரிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை செப்டம்பர் 1 ஆம் தேதி சிபி-சிஐடி (CB-CID) போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ALSO READ: PM Kisan விவசாயிகள் நலத்திட்ட ஊழலில் CBI விசாரணை தேவை: தமிழக விவசாயிகள்
சி.பீ-சி.ஐ.டி அதிகாரிகள், விருத்தாசலம் அருகே விஜயமாநகரத்தில் ஆரம்ப விசாரணையை நடத்தினார்கள். இதில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் கணினி மைய உரிமையாளர் உட்பட எட்டு பேர் பெயரிடப்பட்டனர். விசாரணை 6 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது.
கடைசியாக வந்த தகவல்களின் படி, அதிகாரிகளால் இன்னும் சரியான பதிலைப் பெற முடியவில்லை. தொடர்ந்து விசாரித்த பின்னரே கைதுகள் மேற்கொள்ளப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ஊழல் குறித்து அறிந்த வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஒரு கூட்டத்தை கூட்டி, இது குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 8 விவசாய அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்
வேலூர் மாவட்டத்தில் PMKSY-ல் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் 8 விவசாய அதிகாரிகள் மற்றும் 9 தற்காலிக ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது தெரியவந்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட வேளாண் அதிகாரிகளில் 3 உதவி விவசாய அதிகாரிகள், 4 உதவி தோட்டக்கலை அதிகாரிகள் மற்றும் ஒரு துணை விவசாய அதிகாரி ஆகியோர் அடங்குவர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சிபி-சிஐடி அதிகாரிகள் திட்டம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளின் பதிவுகளையும் சரிபார்த்து வருகின்றனர்.
மாவட்டத்தில் பயனடைந்த 19,191 பேரில் 3435 பேர் மட்டுமே தகுதியுடையவர்கள் என்று கூறப்படுகிறது. நன்மைகளைப் பெற்ற தகுதியற்ற பயனாளிகளில் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த 1454 பேரும், பிற மாநிலங்களைச் சேர்ந்த 327 பேரும் அடங்குவர். வேலூர் மாவட்டத்தில் மொத்த திட்ட பரிவர்த்தனைகள் ரூ .1.20 கோடியாக இருந்தன. இதில் 25 லட்சம் ரூபாய் மட்டுமே மீட்கப்படுள்ளது. மீதமுள்ள தொகையை மீட்க அதிகாரிகள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
ALSO READ: PM Kisan விவசாயிகள் நலத்திட்டத்தில் ஊழல்: 13 மாவட்டங்களில் விசாரணை!!