தமிழகம், புதுவை மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தென் தமிழகப் பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது!
தென் தமிழகப் பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. நேற்று காலை முதல் கடல் சீற்றம் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..!
தென்மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என்றும் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடற்பகுதியில் 3.5 மீட்டர் முதல் 4.2 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்து காணப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் காற்று பலமாக வீசும் என்பதால் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, தோவாலா மற்றும் சின்னக்கல்லாரில் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.