கொரோனா காரணமாக Tamil Nadu Premier League இவ்வாண்டு நடக்காமல் போகலாம்: ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!
கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் அழிவதற்கான சமீபத்திய சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படாததால், தமிழக பிரீமியர் லீகின் (TNPL) ஐந்தாவது சீசன் இந்த ஆண்டு ரத்து செய்யப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்று முற்றிலும் அழிவதற்கான சமீபத்திய சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படாததால், தமிழக பிரீமியர் லீகின் (TNPL) ஐந்தாவது சீசன் இந்த ஆண்டு ரத்து செய்யப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TNPL 2020 ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை விளையாடப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஆகஸ்ட்-செப்டம்பரில் நடத்தலாம் என்ற எண்ணத்துடன் தமிழக கிரிக்கெட் சங்கம் (TNCA) மே மாதத்தில் போட்டியை ஒத்திவைத்தது. ஆனால் கொரோனா தொற்றிலிருந்து தமிழகமும் நாடும் இன்னும் விடுபடா நிலையில், தற்போது இந்தப்போட்டிகள் நடக்காது என்றே தோன்றுகிறது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 57,117 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சகம் அளித்த தரவுகளின்படி, மொத்தம் 57,968 பாதிப்புகள் மற்றும் 3,935 இறப்புகளுடன் தமிழகம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
"நாங்கள் ஆரம்பத்தில் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இந்தப்போட்டிகளை நடத்தலாம் என நினைத்தோம். ஆனால் இப்போது அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. போட்டியை நடத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தோன்றுகிறது, ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் இறுதி முடிவை எடுப்போம்" என்று ஒரு TNCA அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2020 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தின் நட்சத்திர வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், முரளி விஜய் அனைவரும் இந்தியாவுக்கு வெளியே இருப்பார்கள்.
"IPL இப்போது நடக்கப்போகிறது, வீரர்கள் IPL-லிலிருந்து திரும்பிய பிறகு, ரஞ்சி டிராபி சீசன் தொடங்கலாம். எனவே இந்தப் போட்டிகளை நடத்த சரியான நேரம் கிடைக்காமல் போகலாம்.” என்று அந்த அதிகாரி கூறினார்.
TNPL-ன் நான்காவது சீசனில், சேபாக் சூப்பர் கில்லீஸ் (Chepauk Super Gllies) திண்டிகல் டிராகன்களை (Dindigul Dragons) வீழ்த்தி இறுதிப் போட்டியில் 2019-ஆம் ஆண்டின் வெற்றியாளர்களானார்கள்.
ALSO READ: வெஸ்ட் இண்டீஸில் Caribbean Premier League 2020 அறிவிப்பு, முதல் போட்டி எப்போது?