தமிழகத்தில் ஞாயிறு அன்று மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1075-ஆக அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பட்டியலில் தேசிய அளவில் தமிழகம் 1075 வழக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்றும் 11 இறப்புகளை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர் சந்திப்பில் ஈடுப்பட்டார். இந்த சந்திப்பின் போது அவர் குறிப்பிடுகையில்., 


தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்கள் ஊழியர்கள் உள்பட தமிழகத்தில் 1075 கொரோனா வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் இருவர் அரசு மருத்துவர்கள், இருவர் ரயில்வே மருத்துவர்கள் மற்றும் நான்கு தனியார் மருத்துவர்கள் அடங்குவர். 50 பேர் இதுவரை நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.


தமிழகத்தில் இதுவரை 10,655 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.  வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் 43,770 பேர் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை தனிமைப்படுத்தலில் 1890 பேர் உள்ளனர். மற்றும்  162 அரசு தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் உண்டாக்கப்பட்டுள்ளது.


தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா சோதனைக்கான செலவை மாநில அரசே ஏற்கும் என்று தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னையில் அதிகப்படியாக 199 வழக்குகள் பதிவாகியுள்ளது, சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை 119 வழக்குகள், ஈரோடு 64, திருப்பூர் 60 வழக்குகள் பதிவு செய்துள்ளன.



கொரோனா தொற்று பரவலை தடுக்க இந்தியாவின் பல மாநிலங்கள் நேற்று முதல் முழு அடைப்பை நீட்டித்து வருகிறது. எனினும் தமிழகத்தில் முழு அடைப்பு நீட்டிப்பு குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு பின்னரே தமிழகத்தில் முழு அடைப்பு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படம் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.