சென்னை:  2017 பிப்ரவரி 18, அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக (AIADMK Govt) அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக (DMK) கொறடா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற (Supreme Court), ஓபிஎஸ் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்களிடம் தமிழக சபாநாயாகர்  தனபால் விசாரணை நடத்த வேண்டும் என இறுதியாக நடைபெற்ற விசாரணையில் உத்தரவிட்டது. 


ALSO READ | போஸ்டர், பேனர்களால் பரபரப்பு ஏற்ப்படுத்தி வரும் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள்


உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக (AIADMK) எம்.எல்.ஏ-களிடம் நாளை காணொளி மூலம் தமிழக சபாநாயகர் (Speaker Dhanapal) விசாரணை நடத்த உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.