சென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் நான்கு எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து இன்று சபாநாயகர் தனபால், அதிமுக கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பில் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் மற்றும் நாகப்பட்டினம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு வேற கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவேளை நான்கு எம்எல்ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்ப்பட வாய்ப்புள்ளது.


2019 மக்களவையின் இரண்டாம் கட்டத்தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற விருக்கின்றன. அதாவது மொத்தம் 22 சட்டசபை தொகுதி என ஒரு மினி சட்டசபை தேர்தலை தமிழகம் எதிர்கொண்டு உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. 


ஒருவேளை தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை வரவில்லை என்றால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. தமிழக சட்டபேரவையில் பெரும்பான்மையை நிருப்பிக்க முடியாத சூழல் உருவாகும்.