சென்னை: தனது சக போலீஸ் அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தமிழ்நாடு சிறப்பு டிஜிபி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை அதிகாரியின் புகாரில், சிறப்பு டிஜிபி, தனது கையைப் பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும், கையில் முத்தமிட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் (Trichy-Chennai highway) சென்றுக் கொண்டிருந்தபோது பாட்டு பாடச் சொன்னதாகவும், தனது வாகனத்தை நிறுத்த முயன்றாதாகவும் புகாரில் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். விவகாரம் முற்றிய பிறகு சிறப்பு டிஜிபி, பாதிக்கப்பட்டவரின் மாமனாரிடம் சமரசம் பேச முயன்றதாகவும் புகார் கூறுகிறது.  


இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (Madras High Court), ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், தானாக முன் வந்து இந்த வழக்கை (suo motu) எடுத்துள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணையை நேரடியாக மேற்பார்வை இட இருப்பதாகவும் கூறியுள்ளது.


Also Read | ஒற்றைத் தலைவலியும் (Migraine) அதற்கான காரணிகளும்!


ஊடகத்துறையினர் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இந்த விவகாரத்தில் தன்னுடைய விசாரணையை துவங்கிய சி.பி.சி.ஐ.டி. குழு, சாட்சிகளையும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட நபரையும் நேரடியாக விசாரித்து வருகிறது. 


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு (Tamil Nadu Assembly election) ஒரு மாதத்திற்கு முன்னர் இதுபோன்ற விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


ஆண்களில் ஒரு "தவறான மரபணு" (faulty gene) இருப்பதாக நீதிமன்றம் கூறியது, இது ஒரு பெண் தங்களுக்கு அடிபணிந்தவள் என்றும் பெண்ணை "பொருளாக" கருதும் மனப்பான்மையை காட்டுகிறது என்றும் சாடியது.  


Also Read | COVID-19 Vaccine போடுவதற்கு உலகிலேயே இந்தியப் பெண்கள் அதிக விருப்பம் காட்டுவது ஏன்?


நடந்தது என்ன? எங்கே? எப்போது?
1. பாதிக்கப்பட்டவரின் புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, கரூர் மாவட்டத்தில் ஒரு முதல்வரின் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணிகளின்போது இந்த சம்பவம் நடந்தது.


2. முதலமைச்சர் கலந்துக் கொள்ளவிருந்த அடுத்த இரண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு தனது வாகனத்தில் வருமாறு சிறப்பு டிஜிபி பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரியிடம் சொன்னார்.  


3. பயணத்தின் போது, சிறப்பு டிஜிபி சாப்பிடுவதற்கு திண்பண்டங்களையும் சாய்ந்துக் கொள்ள ஒரு தலையணையையும் கொடுத்தார். சிறிது நேரத்தில் பாடச் சொல்லி வற்புறுத்தினார். வற்புறுத்தலின் பேரில், பெண் அதிகாரி ஒரு பாடலைப் பாடினாள்.


4. சிறப்பு டிஜிபி, தனது வலது கையை நீட்டினார். கைகுலுக்கலுக்குவதற்காக என்று நினைத்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி கையை நீட்டியதும், தனது இரு கரங்களால் அழுந்தப் பிடித்துக் கொண்டார்.  


5. "சுமார் 20 நிமிடங்கள்" பாடிய டிஜிபி, பிறகு பெண் அதிகாரியின் கையை பிடித்து முத்தமிட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று சொன்னபோது, புன்னகைத்த டிஜிபி, பரவாயில்லை, என்று சொல்லியிருக்கிறார். பிறகு மீண்டும் கையை பிடிக்க முயன்றாதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.


Also Read | பள்ளி மாணவனுடன் ராகுல் காந்தி Push-up சவால்  சமூக ஊடகங்களில் வைரல்


6. இதற்கு முன்பு பெண் அதிகாரி வேறு இடத்தில் பணியாற்றியபோது, அவரை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாகவும் சொல்லி, அந்த படம் தனக்கு மிகவும் பிடித்ததால், சேமித்து வைத்திருப்பதாக சிறப்பு டிஜிபி கூறினார்.


7. சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து பாதிக்கப்பட்ட அதிகாரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.


8. புகார் அளிக்க சென்னை செல்ல முற்பட்ட பெண் அதிகாரியை எஸ்பி நிலையிலான அதிகாரி ஒருவரும் இரண்டு போலீஸ்காரர்களும் தடுக்க முயன்றனர்.


9. அதிகாரிகள் பணியில் இருந்தபோது உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற பயணத்தின்போது, “சிறப்பு டிஜிபி, சக பெண் அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டதாகத் தெரிகிறது” என்று, நிகழ்வுகளை கோர்வையாக நினைவு கூர்ந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


10. ஐ.பி.சி மற்றும் பிரிவு 3 (prohibition of harassment of woman) மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் (TN Prevention of Women Harassment Act) பிரிவு 354இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Also Read | இந்த விஷயத்தை செய்தால் உங்கள் கணக்கு முடக்கம் Twitter அதிரடி! 


"ஒரு அதிகாரி, அவர் அதிகாரத்தை பயன்படுத்தி   எந்தவொரு செயலையும் செய்ய முடியும் ன்று நினைத்தால், இந்த நீதிமன்றம் ஒரு ஊமையான பார்வையாளராக இருக்கப்போவதில்லை, மேலும் இந்த நீதிமன்றம் நீதியை பாதுகாக்கும் வகையில் செயல்படும்”என்று நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் (Justice N Anand Venkatesh) நீதிமன்ற விசாரணையின் போது கூறினார்.


"அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற அதிகாரி முடிந்த அளவு முயற்சித்தார் என்பதை இந்த புகார் வெட்ட வெளிச்சமாக்குகிறது. பாதிக்கப்பட்ட அதிகாரி அனுபவித்த துன்புறுத்தல் அதிகமானது. பணியின் காரணமாக, வேறு வழியில்லாமல் மூத்த அதிகாரியுடன் உளுந்தூபேட்டைக்கு காரில் செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்பதும் தெரிகிறது.. ” என்று நீதிமன்றம் கூறியது.


இது "ஒரு அசாதாரண வழக்கு" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அங்கு விசாரணையை சரியான பாதையில் முன்னேறுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்பட ஆறு பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.


Also Read | Corona Test பரிசோதனை 3 நாட்களில் 3 முடிவை காட்டுமா? மாநில அமைச்சர் அதிர்ச்சி!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR