தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வு வரும் 29ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும்.


மேலும் மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும். இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை 9,59,618 மாணவ, மாணவிகளும், 38,176 தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். 


இதற்காக தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் 3731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 133 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும்.