ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடும் கட்டுப்பாடு விதித்த மாநில தேர்தல் ஆணையம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வரையறைகளை குறித்து அறிக்கை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.
சென்னை: புதிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுவதால், இந்த மாவட்டகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வரையறைகளை குறித்து அறிக்கை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.
தமிழக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சம் குறித்து பார்ப்போம்:
ஒலிபெருக்கி பயன்பாடு:
* ஒலிபெருக்கிகளை காலை 6 மணி முதல் இரவு 10 வரை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
* அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும்.
* ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
ALSO READ | 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு
சுவரொட்டிகள் குறித்த எச்சரிக்கை:
* எந்த ஒரு அரசு வளாகத்திலும் சுவரொட்டிகளை ஓட்டுதல், கட் - அவுட்கள் வைப்பது, பதாகைகள், கொடிகள் வைத்தல் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை.
* தமிழ்நாடு திறந்தவெளி சட்டம் 1959 படி, தனியார் கட்டிடம் என்றாலும், பொது இடத்தை கடந்து செல்லும் ஒரு நபரின் பார்வையில் படும் தனியார் இடம் அல்லது கட்டிடத்திலும் சுவரொட்டிகள் கூடாது.
* உரிமையாளர்கள் அனுமதி தந்தாலும், தனியார் சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி ஓட்டுவதோ கூடாது.
பாமக தனித்து போட்டி:
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் தனித்துப்போட்டி:
இதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலில் தனித்து போட்டி என அறிவித்துள்ளன
ALSO READ | தொடங்கியது அதிமுக - பாமக மோதல்!
தேர்தல் விவரம்:
முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6
2 ஆம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9
பதிவான வாக்குகள் எண்ணிக்கை அக்டோபர் 12
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR