சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து - சென்னை ஐகோர்ட்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் படித்து வந்த வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சேலம் மாணவி வளர்மதி நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட வேண்டும் என பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
இதனையடுத்து, கடந்த ஜூலை மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சேலம் மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் தளர்ந்து போகாமல் மாணவி வளர்மதி கோவை சிறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
மாணவி வளர்மதி மீதான வழக்கு சேலம் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிட்டார்.