ஜெர்மனியில் நடைபெற்ற இன்டர்நேஷனல் lKA2024 - சமையல் ஒலிம்பிக்கில் சென்னைஸ்  அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 3 தங்கம் உட்பட 10 பதக்கங்களை வென்று  சாதனை படைத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்டர்நேஷனல் கோச்குன்ஸ்ட்:
ஆஸ்டல்லங் எனப்படும் உலகின் மிகப் பிரமாண்டமான IKA சமையல் ஒலிம்பிக்ஸ் ஜெர்மனியில் நடைபெற்றது.  நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இது,  ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. 


இதில் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் சார்பில், சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஐ சேர்ந்த மாணவர்கள், ஜூனியர் பிரிவில் போட்டியிட்டனர். போட்டியிட்ட சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு செஃப் கார்த்திக் மற்றும் செஃப் செந்தில் குமார் ஆகியோர் பயிற்சியாளராக பங்கேற்றனர்.  


இதன் போட்டிகளில் பங்கேற்ற செஃப் ஸ்ரேயா அனிஷ் - 1 தங்கம் , 2 வெள்ளி பதக்கங்களையும், செஃப் சரவண ஜெகன் மற்றும் செஃப் ஜோகப்பா புனித் ஆகியோர்  தலா ஒரு தங்கம்  மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றனர்.  செஃப் அங்கித் கே ஷெட்டி - 2 வெள்ளி பதக்கங்களையும், செஃப் முலம்குழியில் ஆல்பர்ட் ஆகாஷ் ஜார்ஜ் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். 


உலகெங்கிலும் உள்ள தலை  சிறந்த சமையல் நிபுணர்களுடன் போட்டியிட்டு இந்த பதக்கங்களை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஐ சேர்ந்த மாணவர்கள் கைப்பற்றியுள்ளனர்.   


இது தொடர்பாக தென்னிந்திய செஃப்ஸ் அசோசியேஷன் (SICA) தலைவர் செஃப் தாமு, பொதுச்செயலாளர் சீதாராம் பிரசாத் ஆகியோர் தியாகராயநகர் ரெசிடென்சி டவர் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உரையாற்றிய தாமு, தென்னிந்திய செஃப் அசோசியேஷன் அணி 10 பதக்கங்களை வெல்வது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், 124 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். வெற்றி பெற்றவர்கள அடுத்த தலைமுறைக்கு ஒரு பாதையைக் அமைத்துக் கொடுத்துள்ளனர் என்றும் பெருமைபட தெரிவித்தார். 


மேலும் இந்த சாதனைக்காக, இந்திய சமையல் கலை வரலாற்றில்  சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ஐ சேர்ந்த மாணவர்களின் பெயர்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்றார். குறிப்பாக 
இந்த அணி 22 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 2000 சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு பதக்கங்களை வென்றுள்ளனர் என்றும்,  இந்த வெற்றியின் பின்னணியில் SICA பயிற்சியாளர்களின் பங்களிப்பும் மிகப்பெரிய அளவில் உதவியது என்றும் செஃப் தாமு தெரிவித்தார். 


மேலும் படிக்க | வெற்றி துரைசாமியின் நிலை என்ன? டிஎன்ஏ பரிசோதனை கை கொடுக்குமா?


சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - ன் தலைவர் பூமிநாதன், இந்த வெற்றி இனிமேல் இந்தியா வெல்லப்போகும் தங்பதக்கங்களுக்கு முதல் படியாக இருக்கும் என்று தெரிவித்தார். 3 தங்பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு தென்னிந்திய செஃப் அசோசியேஷன் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். சமையல் கலை என்றாலே தென்னிந்தியா தான் என்கிற நிலை உருவாகும் என்றும் அவர் கூறினார்


தென்னிந்திய செஃப் அசோசியேஷன் பொதுச்செயலாளர் சீதராம்பிரசாத், சென்னை மற்றும் பெங்களூருவில் SICA வால் நடத்தப்பட்ட போட்டிகளின் மூலம் போட்டியாளர்கள் கூர்தீட்டபட்டனர் என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பு மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்டது எனவும் அவர் கூறினார். 


மேலும் படிக்க | திருவொற்றியூர் பெரிய கோவிலில் நடந்த 26 திருமணங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ